நடிகை 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' என்ற திரைப்படத்தை ராஜசேகர் துரைசாமி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற, 17 லட்சம் ரூபாய்க்கு, விநியோக நிறுவனமான மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, 9 லட்சம் ரூபாயை வழங்கியது. இந்நிலையில், படத்தை வெளிநாடுகளில் வெளியிட மாஸ்டர் பீஸ் நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, 2 கே ஸ்டூடியோஸ் நிறுவனம், சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், ஒப்பந்தப்படி வெளிநாட்டு உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு அளிக்காமல், படத்தை வெளிநாடு, இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளிநாடுகளிலும் இணையதளங்களிலும் மார்ச் ஒன்றாம் தேதி வரை படத்தை வெளியிட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்கபட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, படத்தை வெளிநாடு, இணையத்தில் வெளியிட தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும் படி, விநியோக நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.