சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் 50-வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இன்று (டிச. 25) தொடங்கி வைத்தனர்.
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு, பயணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், மூதறிஞர் ராஜாஜியின் 50 ஆண்டு நினைவு நாளில் அவரின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
ராஜாஜிக்கும் எங்களுக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் ராஜாஜியின் பேரன் அரசிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று ராஜாஜியின் புகைப்படக் கண்காட்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரி ஒன்றாம் தேதி வரை இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. சிறு குறுத்தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏற்கனவே 3 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள மக்களை கரோனா தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணும் கருத்துமாக பணியாற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா