ETV Bharat / state

சென்னை நாகராட்சியில் மாதம்தோறும் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம் - சென்னை நாகராட்சி

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்களில் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.

Chennai
Chennai
author img

By

Published : Jun 19, 2021, 6:03 PM IST

Updated : Jun 19, 2021, 6:55 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் நாள்தோறும் சராசரியாக 5,000 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு குப்பை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம், உயிரி எரிவாயு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், உலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுஉபயோகத்திற்கும், மறு சுழற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், கடந்த மாதம் மாநகராட்சி சார்பில், தீவிர தூய்மைப் பணி தொடர்ந்து 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு நீண்டநாட்களாக தேங்கியிருந்த 3,260 மெட்ரிக் டன் குப்பைகள், 10,085 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவுகள் என மொத்தம் 13,345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு அவ்விடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள், கட்டிடக் கழிவுகளை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 614 இடங்கள் கண்டறியப்பட்டு 21.08.2021 முதல் 26.06.2021 வரை ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி நடைபெறவுள்ளது.

இந்த தூய்மைப் பணியின் மூலம் சுமார் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள், 4,500 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைப் பணிகளை கண்காணிக்க மண்டலங்களுக்கு அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள தீவிர தூய்மைப் பணிகளை நாள்தோறும் கண்காணித்து அவ்விடங்களை தூய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ’காணொலி வாயிலாக ஆலோசனை பெறலாம்’ - சென்னை மாநகராட்சி

Last Updated : Jun 19, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.