கிண்டி, காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்கள் பராமரிப்பு குறித்து, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ”காந்தி மண்டபத்தில் சமூக நிகழ்ச்சிகள் நடத்தவும், 918 நபர்கள் அமரக் கூடிய திறந்தவெளி அரங்கு மற்றும் இதர மணி மண்பங்களில் மீண்டும் பராமரிப்பு பணி மேற்கொண்டு பொதுமக்களை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு திரையரங்குகளைத் திறப்பது குறித்து ஆலோசித்த பின்பே முடிவு எடுக்கப்படும்.
கொங்கு நாடு விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்துள்ளது. அது தொடர்பாக அவர் கருத்து தெரிவிப்பார். ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரதட்சணைக்கு எதிராக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மேற்கொண்ட உண்ணாநோன்பு