ETV Bharat / state

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? - போர் தொழில்

சமீபத்தில் வெளியாகி பிரபலமடைந்த போர் தொழில் படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்?

author img

By

Published : Aug 12, 2023, 3:39 PM IST

சென்னை: போர் தொழில் படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனுக்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மகளுடன் அடுத்த மாதம் திருமணமாக உள்ளதாக செய்திகள் பரவி வருகிரது.

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகராக நுழைந்து, தனது ஒவ்வொரு படத்தின் மூலம் முத்திரை பதித்து வருகிறார். சூது கவ்வும் படத்தை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே ஆகிய படங்களின் மூலம் நல்ல நடிகராக அறியப்பட்டார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் வரவேற்பை பெற்றதுடன் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. போர் தொழில் படம் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாக மாறியது. மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த படம் என்ற பெயரையும் எடுத்தது. இந்நிலையில் அசோக் செல்வனின் திருமணம் குறித்த செய்தி அவ்வப்போது வெளியாகி வந்தது.

ஆனால் அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை. சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமான பாடகர் பிரகதியும், அசோக் செல்வனும் காதலிப்பதாக வதந்தி வெளியானது. ஆனால் பாடகர் பிரகதி தாங்கள் இருவரும் நண்பர்கள் என பின்னர் விளக்கம் அளித்தார். பின் ஓ மை கடவுளே படத்தில் அவருடன் இனைந்து நடித்த நடிகை ரித்திகா சிங் உடனும் புரளி எழுந்தது.

இதையும் படிங்க: இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் குடும்பம் படும் பாதிப்பே ’நூடுல்ஸ்’ - இயக்குநராக அறிமுகமாகும் அருவி மதன்!

இந்த நிலையில் இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணமகள் நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மகள் என்றும் கூறப்படுகிறது. 80களில் தமிழில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் அருண் பாண்டியன்.

அதுமட்டுமின்றி இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார். இவருக்கு மூன்று மகள்கள். இருவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூன்றாவது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரும் நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட உறுதி என்றாலும் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்‌ மூலம் திருமண பந்தத்தில் இணையும் நட்சத்திரங்கள் பட்டியலில் இருவரும் இணைகிறார்கள் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள்.

இதையும் படிங்க: சிறந்த புராண திரைப்பட விருதை வென்ற 'மாயோன்' திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.