ETV Bharat / state

’அரசின் நடவடிக்கைகளால் வரும் நாள்களில் தொற்று குறையும்’ - ஜி.கே.வாசன் நம்பிக்கை - chennai

சென்னை: அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் வரும் நாள்களில் பெருந்தொற்று பாதிப்பு நிச்சயமாகக் குறையும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அரசின் நடவடிக்கைகளால் வரும் நாட்களில் தொற்று நிச்சயமாக குறையும் - ஜி.கே. வாசன்

author img

By

Published : May 15, 2021, 7:51 PM IST

கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து நிதி வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அவர்கள் எடுக்கக்கூடிய தொடர் நடவடிக்கைகளால் வரும் நாள்களில் பெருந்தொற்று நிச்சயமாக குறையக் கூடிய வாய்ப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

”அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் 100 விழுக்காடு பின்பற்றினாலே கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும், அதேவேளையில் மத்திய அரசும் தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றை தடையில்லாமல் வழங்க வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: விரைவில் தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.