உற்பத்தியை தொடங்கியுள்ள தொழிற்சாலைகள் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சிப்காட் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து நிறுவனங்களும் நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது. மருத்துவ தகுதி பெற்ற பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தொழிலாளர்கள் முறையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் எவ்வாறு பணியைத் தொடர வேண்டும் என சிப்காட் சார்பில் விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
200 பணியாளர்களுக்கு மேல் இருந்தால் தேவைப்படும் சமயத்தில் மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 200 முதல் ஆயிரம் பணியாளர்கள் இருந்தால் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோனை செய்ய வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தினசரி ஒரு மருத்துவர் வந்து பரிசோனை செய்துவிட்டு செல்லவேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பணிக்கு வந்து செல்பவர்களுக்கு நிறுவனங்களே வாகங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் 50 சதவிகிதத்துக்கு மேல் ஆள்கள் பயணிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பணி செய்யும் தொழிலாளர்கள் நன்றாக கைகளை கழுவவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியிடத்தை தினமும் இரண்டும் முறை சுத்தப்படுத்த வேண்டும், ஒவ்வொரு ஷிஃப்ட்டுக்கும் 30 நிமிட இடைவேளை விட வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுடைய தொழிலாளர்கள் வீட்டிலிருந்த பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தென்னகத்திற்கே ஒளிக்கொடுக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அவலம்!