ETV Bharat / state

பல்லாவரம் நகராட்சியின் அலட்சியத்தால் 4 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு - Dengue fever kills four children in Pallavaram

சென்னை: பல்லாவரம் நகராட்சியின் அலட்சியத்தால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Indictment on Pallavaram Municipal Administration, பல்லாவரம் நகராட்சி அலட்சியத்தால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு
author img

By

Published : Nov 5, 2019, 9:03 AM IST

சென்னை அடுத்த பல்லாவரம் வள்ளுவர் பேட்டை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் உள்ள கால்வாய்யில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீரானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

Indictment on Pallavaram Municipal Administration, பல்லாவரம் நகராட்சி அலட்சியத்தால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்‍கடையில் அடிக்‍கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்‍களில் வெளியேறுகிறது. இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்‍கும் போதெல்லாம், அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இவ்வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பெற்றோரின் அலட்சியம்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

Intro:பல்லாவரம் நகராட்சி அலட்சியத்தால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு
Body:பல்லாவரம் நகராட்சி அலட்சியத்தால் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு

பல்லாவரம் பகுதியில் உள்ள பாதாள சாக்‍கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி தெருக்‍களில் தேங்கிநிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்‍கள் குற்றச்சாட்டு.

சென்னை அடுத்த பல்லாவரம் வள்ளுவர் பேட்டை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாகவே புறநகர் பகுதியில் மழை பெய்து வருகின்றது, வள்ளுவர் பேட்டையிலிருந்து மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு அந்த மழை நீர் பல்லாவரத்தில் உள்ள பெரிய ஏரிக்கு செல்கிறது.

மழை அதிகஅளவில் பெய்ததால் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாய் நிரம்பி உள்ளது தற்போது கழிவுநீருடன் வரும் குப்பைகள் மழைநீர் வடிகால் தொட்டியில் தேங்குவதால், தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியின்றி, சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்‍கடையில் அடிக்‍கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்‍களில் வெளியேறுகிறது. இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்திடம் மக்‍கள் புகார் தெரிவிக்‍கும் போதெல்லாம், அலட்சியம் காட்டி வந்துள்ளனர்..

அப்பகுதியில் கால்வாய் நிரம்பியதால் அங்கு கொசுக்கள் அதிகரித்து வருகின்றது

தற்பொழுது சாலை முழுவதும் கழிவுநீரும் சூழ்ந்து இருப்பதால் அவ்வழியாக யாரும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் அப்பகுதியில் வசிக்கும் நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறை மாநகராட்சிக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குழந்தைகளின் உயிருடன் மாநகராட்சி விளையாடுவதை எப்பொழுது நிறுத்திக்கொள்ளும்?

தற்போது நான்கு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது இன்னும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு இருந்து வருவதால் பல குழந்தைகள் உட்பட பாதிக்கப்படுவார்கள்

உடனடியாக மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒரு உயிர் சென்றபின் நடவடிக்கை எடுத்து யாருக்கு என்ன இலாபம் என்று அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி உள்ளனர் இக்கேள்விக்கு மாநகராட்சி பதில் கூறுமா, உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது

சாலையில் கழிவுநீர் மழைநீர் தேங்கி சாலைகளிலும் குடிதண்ணீர் கிணறுகளிலும் கலப்பதால் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாகவும் நகராட்சி விரிந்து சீர் செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தவும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.