ETV Bharat / state

ஆங்கிலேயர்கள் புறக்கணித்த உணவு வகைகளை இந்தியர்கள் தேடித்தேடி உண்ணுகிறார்கள் - டாக்டர் செளமியா சுவாமிநாதன் - சிறுதானியங்களுக்கு அதிக மதிப்பு

ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட உணவு வகைகள் இன்று இந்திய மக்களால் தேடித்தேடி உண்ணப்படுகிறது என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் செளமியா சுவாமிநாதன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 4, 2023, 8:09 PM IST

ஆங்கிலேயர்கள் புறக்கணித்த உணவு வகைகளை இந்தியர்கள் தேடித்தேடி உண்ணுகிறார்கள் - டாக்டர் செளமியா சுவாமிநாதன்

சென்னை: 2023ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் "சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக (ஐ.ஒய்.எம்-2023)" கொண்டாடுகிறது. இதன் மூலம் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலில் நல்வாழ்வுக்காக சிறு தானியங்களின் திறனை வெளிக்கொணர சிறு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் அதிக முயற்சிகளை மேற்கொள்வதற்கும் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு அவற்றை பிரபலப்படுத்துவதற்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக, மூன்று நாள்கள் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.

அந்த மாநாடு வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர். செளமியா சுவாமிநாதன் தெரவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ''தொடர்ந்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த மூன்று நாள்கள் சர்வதேச மாநாட்டில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, தெலங்கானா அரசு வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி, தெலங்கானா அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் இந்தியாவில் உள்ள பல முன்னணி ஆராய்ச்சியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக'' கூறினார்.

இந்த மாநாட்டில் மிகவும் தொன்மை வாய்ந்த பழைமையான விதை வகைகள், சிறுதானிய வகைகள், மற்றும் அரிசி வகைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு சார்பாக கொல்லிமலையிலிருந்து அழிவில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பல விதை வகைகளும், அதே போல இந்தியா முழுவதும் பல வகையான சிறுதானிய வகைகளின் விதைகள் மக்களின் பார்வைக்கும் அவர்கள் வாங்கி பயனடைவதற்கும் வைக்கப்படவுள்ளது.

இந்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டில் அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளத்திற்கு மாற்றாக மக்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளை பற்றியும் அவைகளை உட்கொள்வதற்கான வழிவகைகளை புரிந்து கொள்வது, ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப சிறுதானிய வகைகளின் பங்கை புரிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கிய நோக்கமாக உள்ளது.

மேலும் மதிப்புக் கூட்டபட்ட சிறுதானியப் பொருட்களை காட்சிப்படுத்த ஒரு தளம் அமைத்தல், தனியார் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் இணையும் வாய்ப்பை ஏற்படுத்தி வழங்குதல் என சிறுதானியங்களுக்கு அதிக மதிப்புக் கூட்டபட்ட பொருட்களின் வளர்ச்சியை மேம்படுத்துதல் என முக்கிய நோக்கங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் - தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.