வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவ.25) மாமல்ல்புரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பொழியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பேரிடர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீட்புப் பணிகளுக்காக இந்தியக் கப்பல் படை தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகளைச் செய்ய கப்பல்கள், விமானங்கள், மீட்புப் படை உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியக் கப்பல் படையின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தூத்துக்குடி அனல்மின் நிலைய 5ஆம் அலகில் டர்பன் பழுது நீக்கம்