ETV Bharat / state

IMU Entrance 2023:'கடல்சார் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வாய்ப்பில்லை' - துணைவேந்தர் மாலினி சங்கர் - கப்பல் துறையில் நல்ல வேலைவாய்ப்பு

IMU Entrance 2023:இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நடத்தும் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படும் எனவும், மாநில மொழிகளில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அதன் துணைவேந்தர் மாலினி சங்கர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 10, 2023, 10:53 PM IST

IMU Entrance 2023:'கடல்சார் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வாய்ப்பில்லை' - துணைவேந்தர் மாலினி சங்கர்

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி சங்கர், அப்பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை இன்று (மே.10) வெளியிட்டார். அப்போது கடல்சார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்தும் பேசிய அவர், 'இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சென்னை, கொச்சி, கொல்கத்தா, விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் 2 இடம் ஆகிய இடங்களில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடல் சார் பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற 17 பயிற்சி நிறுவனங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

கப்பலில் பணிபுரிய விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தால் பி.டெக்,. மெரைன் இன்ஜினியரிங் (B.Tech - Marine Engineering), பி.எஸ்சி,. நாட்டிகள் சயின்ஸ்(B.Sc - Nautical science), டிப்ளமோ இன் நேச்சுரல் சயின்ஸ் (Dip. in Natural Science) போன்ற இளங்கலை பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பாடத்திட்டங்களை படிப்பவர்கள் கப்பல் மாலுமி, இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரி, தலைமை பொறியாளர் போன்ற முக்கிய பதவிகளில் அமர முடியும் என்றார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

மேலும், துறைமுகம் மற்றும் அதன் மேலாண்மை பதவிகளில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கும் பி டெக் உன் நாவல் அண்ட் ஆர்க்கிடெக்சர் அண்டு ஒசோன் இன்ஜினியரிங் (B.Tech - Novel and Architecture and Ozone Engineering), பிபிஏ (BBA) போன்ற இளங்கலை கடல் சார் அல்லாத பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பற்றியும் படிப்பவர்கள் கப்பல் கட்டிடக்கலைஞர், கப்பல் வடிவமைப்பாளர், கப்பல் பராமரிப்பு பொறியாளர் மற்றும் கடல் சார் தளவாடும் மேலாளர் போன்ற பதிவிகளில் அமரலாம்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் கடல்சார் தேசியத் தொழில்நுட்ப மையம் திறப்பு!

மேலும் எம்பிஏ போன்ற முதுகலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு பிடித்த மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுகின்றனர். பி.டெக், பி.எஸ்சி பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வினை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இதுபோன்ற தேர்வினை நடத்துவது சிரமம்.

கப்பலில் பணிபுரிபவர்கள் பன்னாட்டு அளவில் பங்கு ஏற்பதால் இந்தப் படிப்பினை படிப்பவர்களுக்கும் சர்வதேச அளவிலான தொடர்பு மொழி அறிவு அவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கற்பித்தால் அவர்கள் பிற்காலத்தில் வேலைக்கு செல்வதில் சிரமம் இருக்கும். அதேபோன்று, பிபிஏ படிப்பில் சேரும் மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் தேசிய தகுதி தேர்வு 'க்யூட்' (Cuet Entrance Exam) எழுதி தகுதி பெற வேண்டும்.

இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் 900 இடங்கள் உட்பட இணைப்பு பெற்ற கல்லூரிகளில் சுமார் 3,000 இடங்கள் உள்ளன. இந்திய கடல் சார் பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். இணைப்பு பெற்ற கல்லூரிகளில் அவர்களே கலந்தாய்வில் நடத்திக் கொள்வோம் எனக் கூறுகிறார்கள். இந்தியா கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கப்பல் துறையில் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது. மாணவர்கள் படிக்கும் பொழுது 60% மதிப்பெண்கள் பெற்றால் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்து கொள்கிறார்கள்.

கப்பல் துறை சார்ந்த படிப்புகளை படிப்பதற்கு வரும் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் இதனை எளிதாக எழுத முடியும். ஜூன் மாதம் 12ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரி விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.