சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் ஜூலை 28 தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
இதில் தலைவர் போட்டிக்கு ஏற்கனவே தலைவர் பதவியில் இருக்கக்கூடிய ஆர்காடி வோர்க்கோவிச் மீண்டும் போட்டியிட்டார் அவரை எதிர்த்து ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ் களம் இறங்கினார்.
இந்த தேர்தலில் ஆர்காடி வோர்க்கோவிச் 157 வாக்குகள் கிடைத்தது அவர் எதிர்த்து போட்டியிட்ட ஆண்ட்ரீ பாரிஸ்போலெட்ஸ் 16 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் அடிப்படையில் மீண்டும் ஆர்காடி வோர்க்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவருக்கு ஐந்து முறை செஸ் உலக சாம்பியனும் தமிழ்நாட்டை சார்ந்தவருமான விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பேனா சிலை வைத்த நேரு ஆதரவாளர்கள்