ETV Bharat / state

பெரியார் - சட்டத்துக்குள் அடங்காத சித்தாந்தம்

author img

By

Published : Sep 17, 2021, 9:25 AM IST

Updated : Sep 17, 2021, 9:30 AM IST

பெரியாருக்கு பின் ஒரு படை இருந்தது, இருக்கிறது, இருக்கும். ஏனெனில் பெரியார் என்பவர் ஒரு தத்துவம் என்பதைத் தாண்டி மனித குலத்துக்கு சத்து கொடுத்த மன்னர்களில் ஒருவர்.

சட்டத்துக்குள் அடங்காத சித்தாந்தம்
சட்டத்துக்குள் அடங்காத சித்தாந்தம்

“மதவாதமும், பிற்போக்குத்தனங்களும் தலைவிரித்தாடுகிறது” என்று உலகத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து செய்தி வந்தால் அந்தத் துன்பமான தருணத்தில் அதை எதிர்ப்பதற்காக நினைவில் எழும் ஒரு பெயர்.

“எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்கள்” என்று இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து செய்தி வந்தால் அந்த இன்பமான தருணத்தில் நினைவுக்கு வரும் ஒரு பெயர்.

ஈரோட்டில் செல்வ குடும்பத்தில் பிறந்து சமூகத்தில் நிலவும் அவலங்களை கண்டு சொகுசு வாழ்க்கையை துறந்த வெண்தாடி புத்தர் பெரியார்.

periyar

சமூகம் திருந்த தன்னளவில் முதலில் திருந்த வேண்டும். தன்னளவில் திருந்துவதுகூட ஒருவகையில் சாத்தியம்தான். ஆனால், தன்னளவிலும் திருந்தி சமூகத்தை திருத்த தன்னோடு ஒரு படையையும் கட்டுவது என்பது அசாதாரணமான ஒன்று.

பெரியாருக்கு பின் ஒரு படை இருந்தது, இருக்கிறது, இருக்கும். ஏனெனில் பெரியார் என்பவர் ஒரு தத்துவம் என்பதைத் தாண்டி மனித குலத்துக்கு சத்து கொடுத்த மன்னர்களில் ஒருவர்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம்

இந்தியாவை தற்போது அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது என்ற ஆதங்கம் பெரும்பாலானோரிடத்தில் உண்டு. அவர்கள் அனைவருக்கும் தேவைப்படும் கேடயங்களில் பெரியார் முக்கியமானவர்.

இப்போது அவர் இருந்திருந்தால், வைக்கமில் நுழைந்ததுபோல் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் அவரது கால் பதிந்திருக்கும் அல்லது பதிய முயற்சி செய்திருக்கும்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம்

இந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு இணையானவர் எவரும் இல்லை என பெரியார் பேசியிருக்கும் சூழலில், இடைநிலை சாதிகளின் பிரதிநிதியே பெரியார், அவர் தலித்துகளை புறக்கணித்ததாக அபாண்ட குற்றச்சாட்டு சமீபத்தில் அதிகம் எழுகிறது.

முத்துரங்க முதலியார் என்ற காங்கிரஸ்காரர், “ஈவெரா பார்ப்பனரல்லாதவர்களின் நலனுக்கான போராட்டத்தின் ஆர்வமிகுதியில் ஹரிஜனங்களின் (தலித்துகள்) பிரச்சினையையும் கையிலெடுத்திருக்கத் தேவை இல்லை. ஹரிஜனங்களுக்குத் தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக்கொள்ள நன்றாகவே தெரியும்” என 1942ஆம் ஆண்டு கூறுகிறார்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம்

காங்கிரஸ்காரர்களின் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது என்று கூறினால், தமிழ்நாட்டில் தற்போது மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான திருமாவளவன், அம்பேத்கரை பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் பெரியாரையும் நான் பார்ப்பதாக குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் வென்று பதவி பிரமாணம் செய்துகொண்டபோது அம்பேத்கர் பெயரோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் பெரியார் பெயரையும் அவர் இணைத்தே தனது பேச்சை முடித்தார்.

நன்றி: பிரதாப் பாஸ்கரதாஸ்
நன்றி: பிரதாப் பாஸ்கரதாஸ்

அம்பேத்கர் எப்படி சாதிகளைக் கடந்த மனித குலத்தின் மகத்துவ போராளியோ அதேபோல்தான் தந்தை பெரியாரும். அவரை இடைநிலை சாதியின் பிரதிநிதியாக முன்னிறுத்தி, தலித்துகளை அவர் ஒதுக்கினார் என கூறுவது, ஒன்று அவர் கருத்தியலை ஏற்றுக்கொள்ள முடியாததன் வெளிப்பாடு, மற்றொன்று பெரியார் பிம்பத்தை உடைக்க முயன்று சுயவிளம்பரம் தேடிக்கொள்வது.

தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டுமென முழங்கியவரை தமிழரே இல்லை; பெரியாரை பின்பற்றுபவர்கள் அனைவரும் வந்தேறிகள் என்பது அபாயகரம்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம்
தந்தை செல்வா, அமிர்தலிங்கம்

திராவிட கொள்கைகளின் அடிப்படைகளில் தமிழ் தேசியமும் ஒன்று என்பதைத்தான் பெரியாரின் சொல்களும், செயல்களும் உணர்த்தின. குறிப்பாக, ஈழத்து காந்தி என போற்றப்படும் தந்தை செல்வா பெரியாரை வந்து சந்தித்ததன் மூலம், தமிழ் சமூகத்திற்கு பெரியார் எவ்வளவு அவசியப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.

பெரியாரை விமர்சிக்கவே கூடாதா என்றால் விமர்சிக்கலாம். ஆனால் அந்த விமர்சனம் அவதூறு நிலைக்கு நகராமல் இருக்க வேண்டும். அறிவுசார் தளத்தை பெரியார் விரும்பினார். ஆரோக்கியமான கேள்வியையும், நியாயம் பிறழாத வாதங்களையும் அவர் நேசித்தார்.

தந்தை செல்வா, அமிர்தலிங்கம்

வாக்கரசியலுக்கு வராமல் தன்னுடைய தளத்தை விரிவுப்படுத்தி போராடியவரை வாக்கரசியலில் தவறாக பயன்படுத்துவதும், அதனை வைத்து தாக்குவதென்பதும் அறமல்ல.

இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்தில் ஒடுக்கப்படுதல் நிகழ்ந்தால் ஹேஷ்டேக்குடன் பெரியார் ட்விட்டரில் உடனடியாக இடம்பிடிக்கிறார். பல மாநில மாணவர்கள் பெரியாரை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி அவர் இந்தியா முழுவதும் விரவி கிடக்கிறார்.

அவரது சித்தாந்த பரவலை தடுப்பதற்கு வாக்கரசியலிலும், அறிவுசார் தளத்திலும், நேரடியாக களத்திலும் எத்தனை பேர் வேண்டுமானால் இயங்கலாம். ஆனால் தடுக்க முடியாது. ஏனெனில் சட்டத்துக்குள் அடங்காத சித்தாந்தம் பெரியார்.

இதையும் படிங்க: பெரியார் எப்போதும் (142*) நாட் அவுட்…

Last Updated : Sep 17, 2021, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.