நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் லைகா புரொக்டக்சன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த 19ஆம் தேதி சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இப்படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தொழில் நுட்ப அம்சங்கள் தொடர்பான கிரேன் உள்ளிட்ட உபகரணங்களை இயக்குவது பராமரிப்பது தன்னுடைய வேலை இல்லை என்றும், சம்பவத்தின்போது தான் 300 மீட்டர் தள்ளி உணவு பரிமாற்றத்தை மேற்பார்வையிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் விபத்துக்கு தொடர்பாக என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஷேசாயி, விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'எங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுங்கள்' - டிஜிபிக்கு நளினி மனு