ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்: 3ஆவது இந்திய அணியில் இடம்பெற்ற 2 தமிழ்நாட்டு வீரர்கள்! - செஸ் ஒலிம்பியாட் 3ஆவது இந்திய அணி அறிவிப்பு

இந்தியா சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் மூன்றாவது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் 3ஆவது இந்திய அணி அறிவிப்பு

author img

By

Published : Jul 3, 2022, 7:05 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் போட்டிகளை நடத்த திட்டமிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் இரண்டு ஆடவர் அணிகள், இரண்டு மகளிர் ஆணிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று (ஜூலை 3) மூன்றாவது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிராண்ட் மாஸ்டர்கள் சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, எஸ்.பி சேதுராமன், அபிஜீத் குப்தா மற்றும் அபிமன்யு பூராணிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் 3ஆவது இந்திய அணி அறிவிப்பு
செஸ் ஒலிம்பியாட் 3ஆவது இந்திய அணி அறிவிப்பு

இதில், கிராண்ட் மாஸ்டர்கள் கார்த்திகேயன் முரளி, எஸ்.பி சேதுராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். கார்த்திகேயன் முரளி தஞ்சாவூரை சேர்ந்தவர் மற்றும் எஸ்.பி. சேதுராமன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவர்.

மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 180க்கும் மேற்பட்ட நாடுகள், 187க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. உலகின் முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்கின்றன. உலக செஸ் சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்டப் பலர் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க: 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.