ETV Bharat / state

இந்தியாவின் வளர்ச்சி, இந்து வளர்ச்சி விகிதமாக இருக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் பெரும் பெருளாதார நாடு எனும் இலக்கோடு இந்தியா பயணித்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 21, 2023, 5:15 PM IST

சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்ச்சி இருக்கை சார்பில், பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த, தீனதயாள் உபாத்யாயா எழுதிய dispersion of thought and integral humanism எனும் 2 புத்தகங்களின் தமிழாக்க நூல்களான சிந்தனை சிதறல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய புத்தகங்களை ஆளுநர் ஆர்ன.என்.ரவி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்சியில் வெளியிட்டார்.

இந்நிகழ்சியில் பேசிய ஆளுநர், இந்த சிறந்த தீர்க்கதரிசியின் கருத்துகளும், பார்வைகளும் அடக்கிவைக்கப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். அப்போது ஆண்டவர்களால் இத்தனை பெரிய கருத்துகள் முடக்கிவைக்கப்பட்டது நமது துர்பாக்கியம். இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து பசி, கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் கிடைக்காத நிலையில் உள்ளோம்.

75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளனர். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம். இதற்கு நான்கு காரணங்களை கூறமுடியும். முதல் காரணம், கடவுள் தான் மனிதர்களை உருவாக்கி மனிதர்களுக்காக மற்ற உயிரினங்களை படைத்ததாக நம்புவது. மேற்கத்திய பார்வை. மனிதனும் இயற்கையின் ஒரு வகையான உருவாக்கம் என்பதே நமது பாரதிய(இந்தியா) பார்வை.

இரண்டாவது இரக்கமின்மை மேற்கத்திய எண்ணங்களைப் பொறுத்தவரையில், ஒருவர் ஏழையாக இருந்தால் அவன் அப்படியே இருக்கட்டும் என்பார்கள். எது சரி, எது தவறு என்பதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், பாரதிய(இந்தியா) பார்வையில் அனைவரும் சமம் என்பது தான் முக்கியம். மூன்றாவது, கார்ல் மார்க்ஸ். நாம் கார்ல் மார்க்ஸ் அறியாதவர், கம்யூனிஸ்டாக இல்லை என்றால் நம்மை பிற்போக்குவாதிகள் என்று கூறும் சிலர் இன்றும் இருக்கின்றனர். 1854ல் பிரிட்டிஷ் ராஜ் இந்தியாவின் சமூக கட்டமைப்புகளை உடைக்கவேண்டும் என கார்ல் மார்க்ஸின் கட்டுரைகளில் எழுதியுள்ளார். நான்காவது ரூசோ சொல்லும் சமூக ஒப்பந்தம்.

தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தர் என்னும் பொறுப்பில் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்லும் போது நம் பேராசியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள் அது வேதனையாக உள்ளது. ஏன் நம் நாட்டில் யாரும் இல்லையா என எனக்குத் தோன்றும். யாரை இப்படி உயர்த்தி வைத்து கொண்டாடுகிறார்களோ அவர்கள் தான் நம்மை அடிமையாக நடத்தினார்கள் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆபிரகாம் லிங்கன் அடிமைதனத்தை அமெரிக்க நலனுக்காக ஆதரித்தார், பெண்களுக்கான ஓட்டு உரிமையை ஆப்ரகாம் லிங்கன் வழங்க மறுத்தார் அவரை ஜனநாயகத்திற்கான உதாரணமாக காட்டுகிறோம் இது தவறான முன்னூதாரணம்.

இந்தியாவின் பிரச்சனைகளை தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க கூடாது அதனை ஒருங்கிணைந்து நாம் எதிர்கொள்ள வேண்டும். 11 கோடி பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் கழிவறைகளும் உள்ளன. கழிவறை போதுமான அளவில் இல்லை என்கிறார்கள். நாம் தனிப்பட்டவர்களை கவனிப்பதை விட மொத்த சமூகமும் சேர்ந்து பயனடையும் வகையில் தான் கொள்கை மற்றும் திட்டங்களை அரசு உருவாக்கி செயல்பட முடியும்.

அடுத்த 6 ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும். உலகில் பல பிரச்சனைகளுக்கு உலக நாடுகளுக்கு தீர்ப்பதற்கு வழி தெரியாமல் உள்ளன. ஆனால் தீர்வு இந்தியாவிடம் உள்ளது. தமிழகத்தில் கவுர விரிவுரையாளர்கள் 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். நிரம்ப படித்த அவர்களுக்கு குறைந்த ஊதியத்தை வழங்கி அவமதிக்கின்றோம். இனியும் மொழி, இனம் ஆகியவை வைத்து மக்களை பிரிக்க முடியாது மக்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். உலகின் பாதி நாடுகள் இந்தியாவுலிருந்து செல்பவர்களுக்கு அந்தநாட்டிற்கு சென்று இறங்கிய பின்னர் விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன இது இந்தியாவின் வளர்சியையும் வலிமையையினையும் எடுத்துரைக்கிறது. காலணியாதிக்க மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் - மாநிலக் கல்விக்குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.