ETV Bharat / state

'கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்' தொழில் நுட்பத்தில் 'இந்தியா சிமெண்ட்' - 'த்வஸ்தா' ஒப்பந்தம்! - specializes in Construction 3D Printing

ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் தயாரித்த 'கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்' தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சென்னையைச் சேர்ந்த 'டீப் டெக் ஸ்டார்ட்அப்' நிறுவனமான 'த்வஸ்தா மேனுபேக்சரிங் சொலுசன்ஸ்'-வுடன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு இந்தியா சிமெண்ட் ஒப்பந்தம் செய்துள்ளது.

கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்
கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்
author img

By

Published : May 25, 2022, 7:51 PM IST

சென்னை: 'இந்தியா சிமெண்ட்ஸ்' மற்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களின் நிறுவனமான 'த்வஸ்தா' ஆகியவை இணைந்து 3டி பிரிண்டிங் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தப்படும் புதிய மூலப்பொருள் வடிவமைப்பை உருவாக்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பரிமாறிக் கொள்வதுடன், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளுக்கு குறைந்த செலவில், குறுகிய காலத்தில் குடியிருப்புத் தீர்வுகளை வழங்கும் முக்கிய திட்டங்களுக்கு பரஸ்பர ஆதரவை வழங்கி வந்தன.

இந்திய கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை, நீண்ட பாரம்பரியம் கொண்ட நிறுவனமும், துடிப்புமிக்க தொடக்க நிறுவனமும் இணைந்து முன்னோடிக் கூட்டாண்மையில் ஈடுபட்டிருப்பது இதுவே முதன்முறை. 2016ஆம் ஆண்டு ஐஐடி முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட 'த்வஸ்தா', மேட் இன் இந்தியா தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருவதுடன், '3டி பிரிண்டிங் பிளாட்பார்ம்'களில் ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் நுட்பங்களுடன் ஒப்பிடும்போது வேகமான, சிக்கனமான மற்றும் நிலையான கட்டுமான முறைகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவை மையமாகக் கொண்டு ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆற்றல் நுகர்வில் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியாவில், பாரம்பரிய ரசாயன அடிப்படையிலான எரிசக்தி ஆதாரங்களை அதிகம் நம்பியுள்ளது.

வீட்டுவசதி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டப் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆற்றல் திறனுள்ள கட்டுமான முறையாக அதன் நம்பகத்தன்மை உள்ளது என்பதை த்வஸ்தா-வின் தொழில்நுட்பமான 'கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்' நிரூபித்துள்ளது.

'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தின் முழு நேர இயக்குநரான ரூபா குருநாத், 'த்வஸ்தா' மேனுபேக்சரிங் சொலுசன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை இயக்க அலுவலருமான சி.வித்யாசங்கர் ஆகியோர் இன்று (மே 25) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

'இந்தியா சிமெண்ட்ஸ்' நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் கூறும்போது, 'சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்டு, குறுகிய காலத்தில் வளர்ந்துள்ள 3டி பிரிண்டிங் நிறுவனமான 'த்வஸ்தா'வுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளோம்.

கன்ஸ்ட்ரக்சன் 3டி பிரிண்டிங்

இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், குறைந்த அளவில் நீர் மற்றும் மணல் பயன்படுத்தப்படுவது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜெய்சல்மார் மற்றும் காந்தி நகர் ஆகிய இடங்களில் இந்திய விமானப் படைக்காக நடைபெற்று வரும் திட்டப் பணிகள், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் பெருநிறுவனம் ஒன்றின் உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கான மூலப் பொருள்களை 'த்வஸ்தா' நிறுவனம் மூலம் பெற்று மிகப் பெரிய ஆதரவை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது” என்றார்.

3டி முறையிலான கட்டுமானத்தில் 30 விழுக்காடு அளவுக்கு குறைவான நீர், மணல் ஆகிய விலைமதிப்பற்ற வளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐஐடி வளாகத்தில் ’த்வஸ்தா’ கட்டியெழுப்பிய 3டி பிரிண்டட் ஹவுஸ், இயற்பியல் கட்டமைப்பை செயல்படுத்துவதில் அதன் திறன்கள், சாத்தியக் கூறுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சோதனை அடிப்படையிலான கட்டுமானமும், உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும், இந்தியாவின் வீட்டுவசதி, உள்கட்டமைப்பு சவால்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான மாற்றுத்தீர்வை எடுத்துரைக்கிறது. கரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு, ‘இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட டாஃபிங் யூனிட்களை’ செயின்ட் கோபைன் நிறுவனத்துடன் இணைந்து அமைப்பதில் இந்நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

இதையும் படிங்க: பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு - 101 மாணவர்களுக்கு சென்னை ஐஐடி சான்றிதழ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.