கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,271ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கரோனா காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701லிருந்து 71ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி,
- ராயபுரம் - 113 பகுதிகள்
- திரு.வி.க. நகர் - 123 பகுதிகள்
- வளசரவாக்கம் - 35 பகுதிகள்
- தண்டையார்பேட்டை - 29 பகுதிகள்
- தேனாம்பேட்டை - 73 பகுதிகள்
- அம்பத்தூர் - 62 பகுதிகள்
- கோடம்பாக்கம் - 53 பகுதிகள்
- திருவொற்றியூர் - 37 பகுதிகள்
- அடையாறு - 17 பகுதிகள்
- அண்ணா நகர் - 27 பகுதிகள்
- மாதவரம் - 55 பகுதிகள்
- மணலி - 43 பகுதிகள்
- சோழிங்கநல்லூர் - 17 பகுதிகள்
- பெருங்குடி - 15 பகுதிகள்
- ஆலந்தூர் - 13 பகுதிகள், இவைகள் தொடர்ந்து 28 நாள்களுக்கு கட்டுப்படுத்தப்படும். அதில் கரோனா வைரஸ் பரவல் இல்லை என்றால், தளர்வு அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்!