சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், மே மாதத்தில் 10ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கையானது ஜூன் 1ஆம் தேதியில் 15ஆயிரத்து 770ஆகவும், ஜூன் 6ஆம் தேதி 20ஆயிரத்து 993ஆகவும், ஜூன் 14ஆம் தேதி 30ஆயிரத்து 444 ஆகவும், ஜூன் 24ஆம் தேதி 50ஆயிரமாகவும் கடந்து தற்போது பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.
மேலும், ஜூன் 3ஆம் தேதி சென்னையில் மட்டும் 2ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 689ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது போல் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் 100ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை ஜூன் 8ஆம் தேதி 501ஆகவும், ஜூலை 1ஆம் தேதி 929 ஆகவும் உயர்ந்தது.
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 67 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை ஆயிரத்தை 996ஆக உயர்ந்து, சராசரியாக இறப்பு விகிதம் 1.54 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக கரோனா பாதிப்பாளர்கள் மற்றும் குணமடைந்தோரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மண்டலம் | பாதிக்கப்பட்டவர்கள் | இறந்தவர்கள் |
ராயபுரம் | 8609 | 150 |
தண்டையார்பேட்டை | 7193 | 143 |
தேனாம்பேட்டை | 7247 | 151 |
கோடம்பாக்கம் | 6956 | 88 |
அண்ணாநகர் | 7097 | 88 |
திருவிக நகர் | 5305 | 104 |
அடையாறு | 4007 | 57 |
வளசரவாக்கம் | 3008 | 32 |
அம்பத்தூர் | 2921 | 32 |
திருவொற்றியூர் | 2601 | 59 |
மாதவரம் | 2113 | 23 |
ஆலந்தூர் | 1650 | 19 |
பெருங்குடி | 1684 | 19 |
சோழிங்கநல்லூர் | 1321 | 8 |
மணலி | 1169 | 12 |
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற காவல்துறை உயர் அலுவலர்கள்