கரோனா தொற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த வீதி வீதியாக சென்று கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகவசம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது என பல்வேறு யுத்திகளை மாநகராட்சி நிர்வாகம் கையாண்டு வருகிறது. இருப்பினும், இந்த நோய் தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது, வெளியில் இருப்பவர்கள் யாரும் உள்ளே வர முடியாது. அங்குள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாநகராட்சி அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், சென்னை 15 மண்டலங்களிலும் சேர்த்து 90ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 104ஆக உயர்ந்துள்ளன. மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது,
தண்டையார்பேட்டை - 50
திருவிக நகர் - 3
அம்பத்தூர் - 9
அண்ணா நகர் - 8
தேனாம்பேட்டை - 8
கோடம்பாக்கம் - 11
வளசரவாக்கம் - 10
அடையாறு -1
சோளிங்கநல்லூர் - 4
இந்தப் பகுதிகளில் 14 நாட்கள் தொடர்ந்து நோய்த்தொற்று இல்லையென்றால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியின் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும்.