ETV Bharat / state

கோடி கணக்கில் விற்பனையான டோலோ-650 மாத்திரைகள் - நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - சென்னை

டோலோ-650 மாத்திரை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டோலோ650
டோலோ650
author img

By

Published : Jul 7, 2022, 9:27 AM IST

சென்னை: கரோனா காலத்தில் டோலோ-650 மாத்திரை 567 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாகத் தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்நிலையில் டோலோ-650 மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் உள்பட சென்னை, கோவா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னை கீழ்ப்பாக்கம் பேங்க் தெருவில் அமைந்துள்ள ‘மைக்ரோ லேப்ஸ்’ நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் 1973ஆம் ஆண்டில் ஜி.சி சுரனா என்பவரால் பெங்களூரில் நிறுவப்பட்டது. அதன்பிறகு இந்த நிறுவனத்தை அவரது மகன் திலீப் சுரானா நடத்தி வருகிறார். டோலோ-650 மாத்திரை தவிர, உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ‘ஆம்லாங்’ மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான ‘டெனெப்ரைடு’ போன்ற பிராண்டுகளையும் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

இந்நிறுவனம் ஆண்டுக்கு 2ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக இணையதளங்களில் வருவாய் காட்டி, வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சில முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்லூரி மேம்பாட்டுக்கு கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5.46 கோடி மோசடி - மூன்று பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.