ஜேப்பியார் கல்வி நிறுவனம் அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்தை மறைத்து கணக்கு காட்டாமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து சென்னை சூளைமேடு, பெருங்குடி, பூந்தமல்லி, அண்ணா நகர் உள்ளிட்ட 32 இடங்களில் அமைந்துள்ள ஜேப்பியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நவம்பர் 7ஆம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முதல் நான்கு நாட்களாக நடைபெற்ற இச்சோதனையில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கணக்கில் காட்டப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 5 கோடி ரூபாய் ரொக்கம், மூன்று கோடி மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜேப்பியார் நிறுவனம் முறைகேடாக பல்வேறு பணப்பரிவர்ததனைகளைச் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முகிலன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!