சென்னை: சென்னையில் நாளை மறுநாள் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய
பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் பின் வரும் இடங்களில் மின் விநியோகம்
நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல கொடுக்கப்படும்.
மேலும், பூந்தமல்லி பகுதியில் உள்ள மணலி சரவணா நகர், சக்தி நகர், பாஷ்யம் அடுக்கு மாடி, அம்மன் நகர், மீரா நகர், பஜனை கோவில் தெரு, ருக்குமணி நகர், முத்துகுமரன் நகர், நண்பர்கள் நகர், தேவதாஸ் நகர், மலையம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அம்பத்தூர் பகுதியைப் பொறுத்தவரை, அன்னை நகர் கண்டிகை, பெருமாள் கோவில் தெரு, மேட்டு காவியா நகர், லேக் வியூ கார்டன் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாணவர்களுக்கு ஒதுக்கிய ரூ.3,000 கோடி என்ன ஆனது?: அரசுக்கு அண்ணாமலை கேள்வி