சென்னையில் 2015ஆம் ஆண்டு அன்று 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
முதற்கட்ட ஆய்விற்காக 2015இல் பெய்த கனமழையை கணக்கில் எடுத்துள்ளனர். அதில் காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் ஏற்படும் மரணத்தில் இந்திய அளவில் சென்னை 2ஆம் இடத்தில் உள்ளதாகவும் 2075இல் சென்னையில் மழைக்கால நாளில் மழை அளவு 17.3 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கார்பன் அதிகளவு சுற்றுச்சூழலில் கலந்திருப்பதால் எதிர்காலத்தில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையை காட்டிலும் மிக அதிக அளவு மழை செய்வதுடன் பெரு வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவர்களது ஆய்வின்படி எதிர்காலத்தில் டிசம்பர் 2வது வாரம் மழை அளவு 183.5 செ.மீ ஆகவும், 3வது வாரம் மிக அதிகளவாக 233.9 செ.மீ ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.