இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அக்கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்துள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகாயுள்ளது என்றார்.
மேலும், ‘பொன்பரப்பியில் கணிசமான தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் உள்ள இடத்தில் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இதில் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.