ETV Bharat / state

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி! - சென்னையில் இன்று ஒரே நாளில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த உளவுத் துறை காவலர்கள் இரண்டு பேர் உள்பட இன்று மட்டும் ஆறு காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

In Chennai six police personal have corona positive

author img

By

Published : May 3, 2020, 12:27 AM IST

சென்னை நகரில் கரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கரோனா பரவலை தடுக்க சென்னையில் மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, காவல் துறை என அனைவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சென்று கரோனா பாதித்தவரை அழைத்து வருவது, ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை என பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரையும் கரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதில் சென்னை காவல் துறையில் முதலில் கரொனா உறுதி செய்யப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து கோயம்பேடு சந்தையில் பாதுகாப்பிலிருந்த காவலர்கள் முதல் கொண்டு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் ஆறு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுத் துறை காவலர்களாக பணிபுரிந்து வந்த இரண்டு காவலர்களுக்கும், புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த 30 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேபோல் கட்டுப்பாட்டு அறை காவலர்களான பெரவள்ளூர், மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு, ஓட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலர் என ஒரே நாளில் ஆறு காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க...'பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.