ETV Bharat / state

கலாஷேத்ரா முன்பு நீதி கேட்டு போராட்டம்.. குண்டுகட்டாக கைது செய்த போலீசார்! - Kalakshetra case update

கலாஷேத்ரா பாலியல் புகாருக்கு நீதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலாஷேத்ரா வாயிலில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கலாஷேத்ரா முன்பு போராட்டம்; போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்குமிடையே வாக்குவாதம்

author img

By

Published : Apr 10, 2023, 3:57 PM IST

சென்னை: திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா வளாகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு என J6 திருவான்மியூர் காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் போராட்டம் நடைபெறும் என திட்ட வட்டமாகத் தெரிவித்து விட்டனர் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 75க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் கலாஷேத்ரா கல்லூரி வளாகத்திற்கு முன்பு பணியில் ஈடுபட்டனர். அனுமதி மறுக்கப்பட்ட போதும், 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைப்பினர் பதாகைகளை ஏந்தியவாறு கலாக்க்ஷேத்ரா கல்லூரி முன்பு நடை பயணமாக வந்தனர்.

'நீதிபதி கண்ணன் தலைமையிலான சிறப்புக் குழு உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் காவல் துறை கைது செய்யப்பட்டுள்ள ஹரி பத்மனை ஜாமினில் வெளி வராமல் தடுக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். அவர்களைத் தடுத்து நிறுத்திக் காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை திருவான்மியூரில் உள்ள இராஜலட்சுமி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இடையில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்துரு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்) "கலாச்சார விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இவ்வளோ காலங்களாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் அறிக்கை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இருப்பினும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருகின்றனர். இன்று விசாரணைக்கு வரும் ஹரி பத்மன் ஜாமீன் வழக்கில் ஜாமீன் வழங்கக் கூடாது, மீதமுள்ள மூன்று குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். பாலியல் குற்றங்களுக்காகப் போராடுபவர்களை நுழைவு வாயிலில் கூட அனுமதிக்காமல் காவல் துறையினர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி வழக்கு; தலைமறை குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் தக்க சன்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.