சென்னை பூந்தமல்லியிலிருந்து நெமிலிச்சேரி நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் வந்தபோது ஓடும் வாகனத்தின் முன்பக்கத்திலிருந்து கரும்புகை வந்தது.
இதனைக்கண்ட ஓட்டுநர் வீராசாமி சுதாரித்துக்கொண்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி உடனடியாக வேனிலிருந்து கீழே இறங்கினார். இதனிடையே தீ வேனின் முன்பக்கத்தில் மளமளவென எரியத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து ஆவடி, பூந்தமல்லியிலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!