ETV Bharat / state

மூடிய வீட்டில் மூச்சு திணறி நான்கு பேர் பலி! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உயிரை பறித்தது எது? - கொசு விரட்டியால் தீ விபத்து

மணலியில் மின் கொசு விரட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

in chennai Manali Four members of the same family died in a fire accident due to an electrical fault

author img

By

Published : Aug 19, 2023, 1:33 PM IST

சென்னை: மணலி மாத்தூர் மூன்றாவது மெயின் ரோடு 79-வது இரண்டாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் உடையார் (40). இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும், சந்தியா (10 ), பிரியா லட்சுமி (8), என இரு மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

உடையார் தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடையார் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்து காரணமாக கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி செல்வி மருத்துவமனையில் தங்கி இருந்து கணவரை கவனித்து வருகின்றார்.

இந்நிலையில் குழந்தைகள் வீட்டில் தனியாக உள்ளதால் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டி உடையாரின் தாயார் சந்தான லட்சுமி (67) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இருந்து வந்து கடந்த நான்கு நாட்களாக குழந்தைகளுடன் தங்கி கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மூதாட்டி சந்தான லட்சுமி, சந்தியா, பிரியா லட்சுமி மற்றும் எதிர் வீட்டில் வசிக்கும் செல்வியின் அண்ணன் மகள் பவித்ரா (7) ஆகிய நான்கு பேரும் ஒரே வீட்டில் கதவை பூட்டிக்கொண்டு இரவு தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவு கொசுவை விரட்ட வைத்திருந்த மின்கொசுவிரட்டி திடீரென தீப்பிடித்து எரிந்து உருகி கீழே இருந்த அட்டைப்பெட்டியில் தீப்பட்டு வீடு முழுதும் தீப்பற்றி புகை மண்டலமாக மாறியது. அனைவரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு அனைவரும் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை பவித்ராவின் தாய் வேலம்மாள் வெகுநேரமாகியும் குழந்தைகள் வெளியே வராததால் சந்தேகமடைந்து கதவை தட்டியுள்ளார். அப்போது எந்த பதிலுமின்றி அமைதியாக இருந்ததால் ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது வீடு முழுதும் புகைமண்டலமாக இருந்ததுடன் அனைவரும் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாட்டி சந்தானலட்சுமி, சிறுமிகள் சந்தியா, பிரியா லட்சுமி, பவித்ரா ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் தகவல் அறிந்த அங்கு வந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் நான்கு பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின் கொசுவிரட்டியில் ஏற்பட்ட தீ வீடு முழுவதும் பரவியதால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் சிக்கி நான்கு பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததற்கு மின்கொசு விரட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தான் காரணமா அல்லது வேறு ஏதும் மின் சாதன பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்ட கொடூரம்.. மீண்டும் சாதிய மோதலை தூண்ட திட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.