ETV Bharat / state

மெரினா கடற்கரையில் இன்னோவா கார் நூதன திருட்டு.

சென்னையில், குடும்பத்தோடு மெரினா கடற்கரைக்கு வந்தபோது நடந்த சோகம். மாநகராட்சி ஊழியர் எனக்கூறி பெண் ஆசிரியரின் இன்னோவா காரை நூதன முறையில் செய்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

மெரினா கடற்கரையில் இன்னோவா கார் நூதன திருட்டு

author img

By

Published : May 16, 2023, 8:08 PM IST

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை கோட்டரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா தங்க ஜோதி. இவர் கன்னியாகுமரி மகாராஜபுரம் என்ற ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இன்னோவா காரை சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு விடுவதற்காக தனது குடும்பத்தோடு சென்னை வந்த சுமித்ரா ரெட் ஹில்ஸில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

அதன் பின்னர் கடந்த 12 ஆம் தேதி மெரினா குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்து உள்ளார். மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்த அவர், கார் பார்க்கிங்யில் காரை விட்டுள்ளார். அப்போது கார் பார்க்கிங்க்கு டோக்கன் கொடுக்கும் மாநகராட்சி ஊழியர், காருக்கு ரூபாய் 50 டோக்கன் கொடுத்து உள்ளார். டோக்கனை பெற்றுக் கொண்ட சுமித்ரா தங்க ஜோதி தனது குடும்பத்தினருடன் கடற்கரையை நோக்கி பயணித்து உள்ளார்.

அப்பொழுது டோக்கன் கொடுத்த மாநகராட்சி ஊழியர் கார் தவறான இடத்தில் பார்க் செய்யப்பட்டு உள்ளதாகவும், கார் சாவியை கொடுத்தால் சரியான இடத்தில் பார்க் செய்து விட்டு தானே கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய சுமித்ரா தங்க ஜோதி கார் சாவியை கொடுத்து உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாநகராட்சி ஊழியர் கார் சாவியை மீண்டும் கொண்டு வந்து கொடுக்கவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த சுமித்ரா தங்க ஜோதி கார், பார்க்கிங் வந்து தனது காரை பல இடங்களில் தேடி பார்த்தும், கார் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டு இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து சுமித்ரா தங்க ஜோதி, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

போலீசார் விசாரணையில், இவர்களிடமிருந்து காரை பெற்றது மாநகராட்சி ஊழியர் இல்லை என்பதும் மாநகராட்சி ஊழியர் போல உடை அணிந்த நபர் திட்டமிட்டு காரை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த அண்ணா சதுக்கம் போலீசார் காரை திருடி சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மெரினா கடற்கரைக்கு தனது குடும்பத்தோடு வந்த நபரிடம் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து மர்ம நபர் ஒருவர் காரை திருடி சென்ற சம்பவம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அயன் பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.