எளிதாகத் தொழில் செய்வதை, குறிப்பாக எல்லைகளைத் தாண்டி எளிதாக வணிகம் செய்வதை, ஊக்குவிக்கும் அரசின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, முகமில்லா மதிப்பீட்டின் முதல் கட்டத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 8ஆம் தேதியன்று சென்னை, பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய முயற்சி, நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும், உள்நாட்டுக் கொள்கலன் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் விரிவுப்படுத்தப்படும்.
மதிப்பீட்டு முறைகளில் முகமறியா தன்மை, வெளிப்படைத்தன்மை, சீரான தன்மை ஆகியவற்றைக் கொண்டுவருவதே முகமில்லா மதிப்பீட்டின் குறிக்கோளாகும்.
இறக்குமதியாளர்களின் நலனுக்காக, மதிப்பீட்டில் சுங்க அலுவலரின் உடல் சார்ந்த இடையீட்டின் தேவை இல்லாமல், துரித சுங்கத்தின் குடையின்கீழ் முகமில்லா மதிப்பீட்டை எளிதாகச் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான அலுவலகத்தை சென்னை சுங்க மண்டலத்தின் முதன்மைத் தலைமை ஆணையர் வாசா சேஷகிரி ராவ் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க...சுகாதாரத் துறையில் மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!