சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஐந்தே வயதான சிறுமி அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாவது வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதமாக பள்ளிக்கு வேன் மூலம் சென்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (நவ.29) சிறுமி தனது தாயிடம் வேன் ஓட்டுநர் ராஜா(55) என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வேன் ஓட்டுநர் ராஜா மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!