ETV Bharat / state

சென்னையில் 24 மின்சார ரயில் சேவை ரத்து - சென்னை புறநகர் ரயில் நிலையம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து 18 மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து 6 மின்சார ரயில்கள் என மொத்தம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து
author img

By

Published : Apr 6, 2019, 2:59 PM IST

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 7ஆம் தேதி) சென்னையில் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது.

நாளை இயக்கபடும் சிறப்பு ரயில்கள்:

காலை 8.50, 9.40 மணிக்கு திருத்தணி- அரக்கோணம்

காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்-அரக்கோணம்

காலை 11.55, 1.50, 2.25 மணிகளுக்கு அரக்கோணம்-திருத்தணி

பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி-பட்டாபிராம் வரை இயக்கபடவுள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக 24 மின்சார ரயில்கள் ரத்து -  தெற்கு ரயில்வே அறிவிப்பு .

சென்னை மூர்மார்கெட்டில் இருந்து வில்லிவாக்கம் வரையிலான ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (07-04-19) சென்னை மூர்மார்கெட்டில் இருந்து 18 மின்சார ரயில்களும் ,சென்னை கடற்கரையில் இருந்து 6 மின்சார ரயில்களும் என மொத்தம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மூர்மார்க்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படுகிறது.

மேலும் பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி- பட்டாபிராம் சைடிங் வரையும், காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்- அரக்கோணம் வரையும், காலை 11.55, 1.50, 2.25 மணிகளுக்கு அரக்கோணம்- திருத்தணி வரையும், பிற்பகல் 1.15 மணிக்கு திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வரையும், காலை 8.50, 9.40 மணிக்கு திருத்தணி- அரக்கோணம் வரையும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.