சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 85 ஆயிரத்து 859 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 69 ஆயிரத்து 382 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,434 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் கரோனா தொற்றால் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 030 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் செய்யப்பட்ட அதிக பரிசோதனை எண்ணிக்கை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரோனாலிருந்து குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
வஎண் | மாவட்டம் | குணமடைந்தவர்கள் |
01 | ராயபுரம் | 9031 |
02 | தண்டையார்பேட்டை | 7751 |
03 | தேனாம்பேட்டை | 7896 |
04 | கோடம்பாக்கம் | 7456 |
05 | அண்ணா நகர் | 8011 |
06 | திருவிக நகர் | 5691 |
07 | அடையாறு | 4442 |
08 | வளசரவாக்கம் | 3515 |
09 | அம்பத்தூர் | 3346 |
10 | திருவெற்றியூர் | 2627 |
11 | மாதவரம் | 2234 |
12 | ஆலந்தூர் | 1934 |
13 | பெருங்குடி | 1872 |
14 | சோளிங்கநல்லூர் | 1507 |
15 | மணலி | 1306 |
மேலும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என மூன்று லட்சத்து 61 ஆயிரத்து 80 நபர்களை மாநகராட்சி அலுவலர்கள் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர்.