புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து746 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் ஆயிரத்து 375 நபர்கள், காரைக்காலில் 183 நபர்கள், ஏனாமில் 138 நபர்கள், மாஹேவில் 50 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 13 ஆயிரத்து 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 54 ஆயிரத்து 375 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 17 பேரும், ஏனாமில் 2 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.