ETV Bharat / state

சென்னையில் 2022-ல் போதைப்பொருள் புழக்கம் பன்மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்!

author img

By

Published : Jan 10, 2023, 6:15 PM IST

சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், போதை மாத்திரைகளின் புழக்கம் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் காவல்துறையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

2022
2022

சென்னை: சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், "இளைஞர்களிடையே புகையிலையாக இருந்த போதை பழக்கம் தற்போது கஞ்சா, போதைப் பவுடர், போதை மாத்திரைகளாக உருவெடுத்துள்ளது. இந்த போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு 438 வழக்குகளில் 836 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,460 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து, 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1,022 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா மட்டுமல்லாமல் மெத்தபெடமைன், எபிட்ரின், கொகைன் போன்ற பவுடர் வடிவிலான போதைப் பொருட்களின் புழக்கத்தையும் தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 2021ஆம் ஆண்டை விட 2022ஆம் ஆண்டில் 10 மடங்கு அதிகளவு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 52,612 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நைட்ரோவிட் வலி நிவாரணி மாத்திரைகள், LSD ஸ்டாம்புகள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 7 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022ல் இது இரண்டு மடங்கு உயர்ந்து 12.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. போதைப் பொருட்களின் விற்பனையை மட்டுமல்லாமல், மொத்த விநியோகம் செய்யும் இடங்களையும் கண்டுபிடித்து அழிக்கும் வகையில், போதை கும்பல்கள் மீது பல்வேறு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாகப் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல்கள் மீது பிணை பத்திரம் பெறப்படுதல், அதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் போதை பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்த 685 பேரிடம் பிணை பத்திரம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டது, 63 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை போன்ற கடும் நடவடிக்கையின் மூலம் சென்னையில் மட்டும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரின் மீது 823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 776 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சிறப்பு நடவடிக்கைகளால் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கு வழக்குகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், விரைந்து விசாரணையை முடித்து தண்டனை மற்றும் அபராதங்களைச் சென்னை காவல்துறை பெற்று தந்துள்ளது. குறிப்பாக 2021ஆம் ஆண்டில் 10 வழக்குகள் தீர்க்கப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டில் 92 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2,000 கிலோ அளவிலான போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த பள்ளி மாணவர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.