ETV Bharat / state

புதுச்சேரியில் முழு ஊரடங்கு கோரும் மனு - மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு - notice to state and center

சென்னை : புதுச்சேரியில் கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Impose full lockdown in puduchery state, notice to state and central, MHC

author img

By

Published : Sep 9, 2020, 2:27 PM IST

புதுச்சேரி அரசு, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதால், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அதில், ஒருங்கிணைந்த கரோனா தடுப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஊரடங்குக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவியும், உணவுப் பொருள்களும் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மத்திய உள்துறை செயலர், மத்திய சுகாதாரத்துறை செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், சுகாதாரத் துறை செயலர், மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாகி, ஏனாம் தலைமைச் செயல் அலுவலர்கள் ஆகியோர் ஆறு வாரத்திற்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.