சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு இன்று மாலை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இந்நிலையில் சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை முக்கியச் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஹோட்டல்வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஜிஎஸ்டி சாலையிலும் சின்ன மலையிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அடையாறு மத்திய கைலாஷ் அருகேயுள்ள இந்திரா நகர் ரயில் நிலையத்தின் முன்புற வாயில் மூடப்பட்டது. பொதுமக்கள் பின்புற வாயில் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.