ETV Bharat / state

சென்னை வாசிகளுக்கு போக்குவரத்து காவல்துறையின் முக்கிய அறிவிப்பு! - அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வரும் 29 ஆம் தேதி கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிலையில், அன்று போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பை சென்னை வாசிகளுக்கு போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

Important Notice of Traffic Police for Chennai Residents

author img

By

Published : Jul 27, 2022, 9:24 PM IST

சென்னை: இது குறித்து தமிழ்நாடு காவல்துறை செய்திக் குறிப்பில், "பிரதமர் மோடி வரும் 29ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி விழா நடைபெறும் சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் காலை நேரங்களில் குறிப்பாக காந்தி மண்டபம் சாலை, காண்கார்டு சந்திப்பு, ஹால்டா சந்திப்பு, கிண்டி மேம்பாலம் முதல் சென்னை விமான நிலையம் வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது.

எனவே விமான நிலையம் செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பயணத் திட்டமும்.. சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பும்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.