உத்ரகாண்டில் 6 திட்டங்களைத் திறந்து வைக்கும் பிரதமர்:
பிரதமர் நரேந்திர மோடி, உத்ரகாண்ட் மாநிலத்தில் 'நமாமி கங்கா திட்டத்தின்' மூலம் 6 புதிய நீர் சார்ந்த திட்டங்களை காணொலிக் கூட்டம் மூலம் திறந்து வைக்கிறார். இந்த திட்டங்களின் மூலம் 68 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை உட்பட பயனுறும் திட்டங்கள் மக்கள் வசம் ஒப்படைக்கப்படுகின்றன.
முதலமைச்சர் ஆட்சியர்களுடன் ஆலோசனை:
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலையில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார். நண்பகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்கிறார்.
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்த உரிமை மீறல் விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கு: இன்று தீர்ப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று டெல்லி நீதிமன்றத்தில் வெளியாகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் மோதல்:
13ஆவது ஐபிஎல் சீஷனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அபுதாயில் மோதவுள்ளன. இரண்டு போட்டிகளில் விளையாடி தோல்வியைத் தழுவிய சன்ரைசர்ஸ் அணி, இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.