ETV Bharat / state

தமிழ் கட்டாய பாட சட்டம் குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்யக்கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Implementation
Implementation
author img

By

Published : Dec 21, 2022, 2:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி 2006ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், "அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளன. 2015-16ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாட திட்ட பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில், அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளை கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால், அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த கடுமையான பிரிவுகளும் இல்லாததால், இச்சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை.

இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47 ஆயிரத்து 55 பேர் தமிழ் மொழிப்பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.

அதனால், தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தமிழ்நாடு அரசு இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதையும் படிங்க: நெடுஞ்சாலைக்கு நிலம் கையக விவகாரம்: போலி ஆவணங்களுக்கு இழப்பீடாக அளித்த 18.57 கோடி மீட்பு - சிபிசிஐடி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.