சென்னை: இந்து சமய அறநிலையத்துறைய ஆணையர் குமரகுருபரன் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஆன்லைனில் வாடகை செலுத்தும் திட்டத்தை அக்டோபர் 8ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதன்படி இந்த திட்டம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் வாடகைக்கு இருப்போர், நேரிலோ அல்லது இணையம் வாயிலாகவோ, அல்லது கோயில்களின் கணினி வாயிலாகவோ பணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் குறைந்த கோயில்களில் வருவாய் அதிகம் உள்ள கோயில்களின் மூலமாக வரி வசூல் செய்து கம்யூட்டர், பிரிண்டர் வசதி ஏற்படுத்தித் தரப்படும். இதற்கான அதிகாரம் செயல் அலுவலர், அறங்காவலர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ரூ.50 ஆயிரத்திற்கும் மிகாமல் உபகரணங்கள் கொள்முதல் செய்து கொள்ளவும்; இதற்கு உதவி ஆணையர் அல்லது இணை ஆணையரிடம் அனுமதி பெற்று கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிக்கை அக்.25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வலைதளம் வாயிலாக நன்கொடை அளிக்கலாம் - அமைச்சர் சேகர் பாபு