”மத்திய அரசின் ஆயுஷ் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் ”ஆரோக்கியம்" என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டடுள்ளதை 75 ஆண்டு கால பாரம்பரியம் உள்ள முன்னனி சித்தா, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கும் பன்மாநில கூட்டுறவு நிறுவனமான "இம்ப்காப்ஸ்"சார்பில் மற்றும் இம்ப்காப்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 16 ஆயிரம் சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி மருத்துவர்கள் சார்பிலும் வரவேற்கின்றோம்.
ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் " நிலவேம்பு" மற்றும் "கபசுரக் குடிநீர் ஆகியவற்றினை மக்களுக்கு வழங்கிடுவதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட இயலும் என்று தமிழ்நாடு பரிந்துரை செய்திருப்பது உண்மையிலேயே மக்களின் நலன் காக்கும் செயலாகும்.
"நிலவேம்பு" மற்றும் "கபசூர குடிநீர் ஆகியவற்றினை சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் படி பொதுமக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து அதன்மூலம் "கரோனா” வைரஸ் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.
மேற்கண்ட மக்கள் நலன் காக்கும் நடவடிக்கையினை இந்நேரத்தில் அறிவித்து செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு தனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பார்க்க: ’வெளியே சுற்றினால் கரோனா பரிசோதனை’