ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி..மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்! - தமிழ் செய்திகள்

Impact of ETV Bharat News: சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் டன் கணக்கில் குப்பைகள் கரை ஒதுங்கிய குப்பைகளை அப்புறப்படுத்தக் கோரி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் குப்பைகளை அகற்றவதற்கான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

Impact of ETV Bharat News J Radhakrishnan IAS inspects in Chennai
மெரினா கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 1:49 PM IST

சென்னை: கடந்த நவம்பர் மாதம் இறுதியில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல வலுப்பெற்று, முதலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.

இந்த நிலையில் இன்று (டிச.3) காலை 5.30 மணியளவில், அந்த கற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கக்கடலில் 300 கிலோ மீட்டர் புதுச்சேரிக்கு தென்கிழக்காகவும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று டிச.4 ஆம் தேதி (நாளை) காலைக்குள் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு, தெற்கு ஆந்திர கடற்கரைக்கு நகர்ந்து, நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிச.5 ஆம் தேதி முற்பகலில் ஒரு புயலாகக் கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டன் கணக்கில் கடலில் கலந்த குப்பைகள்: இந்நிலையில், அடையாறு வழித்தடம் மற்றும் கூவம் வழித்தடத்தில் உபரிநீர் அதிகமாக திறந்துவிடப்பட்டதன் காரணமாக, ஆற்றில் இன்றுவரை தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் அகற்றப்படாமல் இருந்த ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும் கடலில் கலந்துள்ளன. மேலும், நேற்று முதல் கடற்பரப்பின் மேல் காற்றின் வேகம் அதிகமானதன் காரணமாக, கடல் அலையின் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. இதனால், கடலில் கலந்திருந்த குப்பைகள் மற்றும் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தும் டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.

சுற்றுலா தலமாக விளங்கக் கூடிய மெரினா கடற்கரை, தற்போது காண்பதற்கே குப்பை கிடமாக காட்சியளிக்கிறது. எனவே, மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்தில் நேற்று (நவ.2) செய்தி வெளியிடப்பட்டது. மேலும் இதுகுறித்து சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டது.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; குப்பைகளை அகற்ற நடவடிக்கை: இதுகுறித்து ஆணையர் ராதாகிருஷ்ணனை நம்மிடம் பேசுகையில், 'இது தொடர்பாக, இதுவரை மாநகராட்சிக்கு யாரும் தகவல் தெரிவிக்காத நிலையில் ஈடிவி பாரத் நிறுவனம் சார்பில் தெரிவித்ததற்கு நன்றி" எனக் கூறினார். இந்நிலையில், நாம் குறிப்பிட்ட மெரினா கடற்கரை மற்றும் அடையாறு ஆற்றங்கரையோற முகத்துவாரப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அங்கு குவிந்துள்ள குப்பை கழிவுகளை, மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு இன்று அப்புறபடுத்தினர்.

இதைத்தொடர்ந்து, பட்டினபாக்கம் மற்றும் சீனிவாசபுரம் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மீனவ மக்களை சந்தித்த தங்களுடைய மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும், புயல் நேரத்தில் கடற்கரை அருகில் இருக்கும் வீடுகளில் யாரும் இருக்க வேண்டாம் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுரைகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க: புயல் செய்த செயல்..! குப்பை மேடாக காட்சியளிக்கும் மெரினா கடற்கரை.. உடனடி நடிவடிக்கை என மாநகராட்சி ஆணையர் ஈடிவி பாரத்திற்கு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.