ETV Bharat / state

சென்னை ஐஐடி சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமைத் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு - iitm medicines

மருந்துகள் தயாரிப்பதில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் குறைந்த செலவில் பசுமைத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியின் பெண் விஞ்ஞானி கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றுள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமைத் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

author img

By

Published : Feb 16, 2022, 5:22 PM IST

சென்னை: தமிழ் வழியில் பயின்று, மருந்துகள் தயாரிப்பதில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் குறைந்த செலவில் பசுமைத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடியின் பெண் விஞ்ஞானி கண்டுபிடித்து, காப்புரிமை பெற்றுள்ளார். மேலும் சென்னை ஐஐடியில் பணியாற்றிவரும் பெண் ஆராய்சியாளரின் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.

மேலும் பென்சோ தியோபென் எனப்படும் மருத்துவ ரீதியான மூலப்பொருள் தயாரிப்பில் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சென்னை ஐஐடியின் வேதியியல் துறை விஞ்ஞானி பூங்குழலி காப்புரிமையைப் பெற்றுள்ளார். மயிலாடுதுறையைப் பூர்விகமாகக் கொண்ட ஆராய்சியாளர் பூங்குழலி, எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி படிப்பை தமிழ் வழியில் முடித்தவர்.

தற்போது சென்னை ஐஐடியில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுவருகிறார். மருந்துப் பொருள்களின் தயாரிப்புக்குப் பயன்படும் (Benzothyapin) பென்சோதயப்பின் மூலக்கூறை பசுமை வழியில் உற்பத்திச் செய்வதற்கான வழிமுறையைக் கண்டறிந்துள்ளார். அதனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு பென்சோதயோப்பின் மூலக்கூறை பசுமை வழியில் உற்பத்திச் செய்யும் முறைக்கு காப்புரிமை வழங்கி அங்கீகரித்துள்ளது.

இது குறித்து வேதியியல் துறையின் பேராசிரியர் சேகர் கூறியதாவது, “மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், நீரைப் பயன்படுத்தி, அறையின் வெட்பத்தின் அளவிலேயே உற்பத்திச் செய்யும் முறையைக் கண்டறிந்துள்ளோம். இந்த முறையைப் பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதுடன், மருந்துத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் செலவும் குறையும்” எனத் தெரிவித்தார்.

வேதியியல் துறையின் பேராசிரியர் சேகர்

இது குறித்து பெண் விஞ்ஞானி பூங்குழலி கூறும்போது, “மருந்துகளைத் தயாரிக்கும் முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும், வெட்பநிலையை அதிகரிக்காமலும் தயார்செய்யும் முறையைக் கண்டறிந்துள்ளோம். இந்த முறையைப் பயன்படுத்தி எலும்புப்புரை நோய்க்குப் பயன்படுத்தும் ரெலோக்ஸிபென், ஆஸ்துமா நோய்க்குப் பயன்படுத்தும் ஸிலியுடோன், பூஞ்சைக்கு எதிரான மருந்தாகப் பயன்படுத்தும் செர்டாகொனாசோல், சர்க்கரை நோய் போன்ற மருந்துகளில் இடம்பெற்றுள்ள இந்தப் பொருள் ஆபத்தான தொழில்முறை உற்பத்தியிலிருந்து மாற்றுப்பொருளாகத் தயாரிக்கப்படுகிறது.

மருத்துவ ரீதியில் முக்கியமான 2-ஆஸில் பென்சோதியோபென் பொருள்களை வணிக ரீதியாகக் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் புதிய நடைமுறையில் நீர் பயன்படுத்தப்படுகிறது. அறையின் வெப்பத்தில் வைக்கக்கூடிய, மணமில்லாததாக, திறந்தவெளிச் சூழலில் வைக்கக்கூடிய அதிக செலவு பிடிக்காத பொருள்களாக இவை வணிக ரீதியில் கிடைக்கின்றன.

நீரை இதற்குப் பயன்படுத்துவதால், வேதி கரைப்பான் தேவையில்லை. இது தவிர, காற்று மாசு இருக்காது. அறையின் வெப்பத்தில் வைப்பது எரிசக்தியை மிச்சப்படுத்துகிறது. உபப்பொருளான தையோலேட் பயன்பாடு நடைமுறைக்கு வரவிருக்கிறது. வேதிப்பொருள்களால் ஏற்படும் ஆபத்து விளைவிக்கும் நடைமுறைகளை மாற்றி பசுமைத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளோம்.

பெண் விஞ்ஞானி பூங்குழலி

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் எனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கியபோது, பேராசிரியர் ஜி. சேகர், பேராசிரியர் ரமேஷ் எல். கர்தாஸ் ஆகியோரின் உதவியுடன் பசுமைத் தொழில்நுட்பத்தை நான் வடிவமைத்தேன்” என்றார்.

இதையும் படிங்க: வேதா இல்லத்தை விலைக்கு வாங்க செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை திரும்பப் பெறுகிறோம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.