ETV Bharat / state

தொழில்நுட்ப திறன்களை பொறியியல் மாணவர்களுக்கு அளிக்கவிருக்கிறது ஐஐடி மெட்ராஸ் - சென்னை மாவட்ட செய்திகள்

ஐஐடி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜீஸ், சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் சென்டருடன் ஒன்றிணைந்து தொழில்துறைக்கு தயார் நிலையிலுள்ள தொழில்நுட்ப திறன்களை பொறியியல் மாணவர்களுக்கு அளிக்கவிருக்கிறது.

ஐஐடி மெட்ராஸ்
ஐஐடி மெட்ராஸ்
author img

By

Published : Aug 10, 2022, 8:00 PM IST

சென்னை: Indian Institute of Technology Madras (ஐஐடி மெட்ராஸ்) Pravartak Technologies Foundation சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் சென்டர் லிமிடெடுடன் இணைந்து பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு தொழில்துறைக்கு தயார் நிலையுள்ள தொழில்நுட்ப திறன்களை அளிக்கவிருக்கிறது. இந்த கோர்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

‘Sony India Finishing School Skill Development Training Program,’ என்றழைக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு/ மெஷீன் லேர்னிங் (AI/ML), இணைய பாதுகாப்பு மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதோடு கூடவே வணிக தொடர்பு திறன் போன்ற குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளிக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்த கீழ்க்கண்ட லிங்க்கை உபயோகித்து விண்ணப்பிக்கலாம் https://sonyfs.pravartak.org.in/

இந்த புரோகிராம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முக்கியப்படுத்தி ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி, “இந்த புரோகிராம் பட்டம் பெறும் மாணவர்களுக்கும் தொழில் துறைக்கும் இடையே நிலவும் அறிவு மற்றும் திறன் சார்ந்த இடைவெளியை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஏராளமான மாணவர்கள், அதிகுறிப்பாக இந்தியாவின் நகர்ப்புறங்களற்ற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

சோனி இண்டியா ஸாஃப்ட்வேர் சென்டர், இந்த கோர்ஸில் முன்னிலை வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். பிரவர்தக் டெக்னாலஜீஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவர்களுக்கு IITM PTF வாயிலாக இன்டர்வியூக்களை ஏற்பாடு செய்து இதர கம்பெனிகளில் வேலை வாய்ப்பை பெற்று தரும்.

மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை 2020-2021, 2021-2022ல் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்ற மேலும் அவர்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், பொறியியல் பட்டதாரிகளின் அகடமிக் பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் நடைபெறும்

இதற்கும் கூடுதலாக நேர்முக தேர்வை தொடர்ந்து ஓர் எழுத்து தேர்வும் நடைபெறும். அந்த தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றிகரமாக தேர்ச்சிபெற்ற மாணவர்கள் டிரெய்னிங் புரோகிராமின் கீழ், வழங்கப்படும் உதவித்தொகை பெறத் தகுதியடைகிறார்கள்.

இந்த பயிற்சி நடைபெறும் காலம் தோராயமாக ஆறு மாதங்களாகும். மேலும் அது முழு நேர பயிற்சியாக இருக்கும், IITM பிரவர்தக் டெக்னாலஜீஸ் பவுண்டேஷன் வகுப்பறைகளில் நேரடியாக நடத்தப்படும். டிரெய்னிங் புரோகிராமை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.