ETV Bharat / state

IIT Madras: நெய்வேலி மின் உற்பத்தி கந்தக டை ஆக்சைடு சென்னையை பாதிக்கிறதா? - ஐஐடி ஆய்வில் புதிய தகவல் ! - IIT Madras

IIT Madras research: நெய்வேலி மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியாகும் கந்தக டை ஆக்சைடு வாயுவின் பயணத்தின் விளைவாக சென்னையில் புதிய துகள் உருவாக்கத்திற்கு (NPF) காரணமாக அமைகின்றன என சென்னை ஐஐடியின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

என்எல்சி கந்தக டை ஆக்சைடு சென்னையை பாதிக்கிறதா - ஐஐடி ஆய்வில் புதிய தகவல் !

author img

By

Published : Aug 11, 2023, 10:25 PM IST

சென்னை: ஐஐடி தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழுவினர், மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயு உமிழ்வுகள் வளிமண்டலத்தில் சல்பேட் செறிவுள்ள துகள்களாக எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சியில் உண்மையான பன்முகத் தன்மையை நிரூபிக்கும் விதமாக, 8 நாடுகளைச் சேர்ந்த 17 வெவ்வேறு நிறுவனங்களிலிருந்து 27 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற உலகளவில் பங்கேற்றனர்.

சென்னை ஐஐடி வளிமண்டல மற்றும் காலநிலை அறிவியல் மையத்தைச் சேர்ந்த சச்சின் எஸ்.குந்தே தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், தமிழ்நாட்டில் சென்னைக்கு தெற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வை நடத்தினர். நிலக்கரி எரிப்பால் வெளியாகும் வாயுக்களின் தாக்கம் குறித்தும், கோவிட்-19 பொது முடக்கத்தின் போது தூசிப்படல வளர்ச்சி, மேகத்தை உருவாக்கும் பண்புகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் கோவிட்-19 பொதுமுடக்க காலத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின்போது, தூசிப் படலம், மேக உருவாக்கம் ஆகியவற்றில் மனிதர்களால் ஏற்படும் உமிழ்வுகளின் தாக்கம் குறைவாக காணப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வளிமண்டல மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சச்சின் எஸ்.குந்தே கூறும்போது, தூய்மையான சூழலில் நிலக்கரி-எரிப்பு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் SO2 உமிழ்வு, மேகங்களை உருவாக்கும் தூசிப்படல துகள்கள் எவ்வாறு புதிய துகளாக மாறிப் பெருகுகிறது என்பதை ஆய்வு செய்யும் வகையில் அமைந்திருந்தது. மனிதர்களால் உருவாக்கப்படும் தூசிப்படலங்கள் காலநிலை தாக்கத்தை மதிப்பிட இந்த கண்டுபிடிப்புகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஒருங்கிணைந்த உமிழ்வுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.

பிராந்திய காற்று மாசுபாட்டு விளைவுகள்: ஆய்வுக் கட்டுரையில் வழங்கப்பட்ட சோதனை முடிவுகள் மற்றும் பகுப்பாய்வுகள், மேகங்களை உருவாக்கும் திறன் கொண்ட துகள் படலங்கள் எவ்வாறு புதிய துகள்களை உருவாக்குகின்றன, நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து SO2 உமிழ்வுகளில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வெப்பமண்டலத்தில் அமைந்துள்ள இந்தியாவில் ஒப்பீட்டளவில் தூய்மையான சூழலில் இவ்வாறு நிகழ்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் காலநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அவை பெரிதும் மாசுபட்ட கடலோர இந்திய நகரங்களில், பொதுவாக நிலவும் சூழ்நிலைகளுடன் ஒப்பிடுவதற்கான அடிப்படையை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக பொது முடக்கக் காலத்தில் மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து செயல்பட்டதால் தூசிப்படல உருவாக்கத்தின் அடிப்படை செயல்முறைகள் மற்றும் மேக உருவாக்கம் மற்றும் காலநிலையில் அதன் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

இதையும் படிங்க: தண்ணீர் திறக்கவில்லை என்றால் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுசரிப்போம் - கீழ்பவானி விவசாயிகள் போராட்டம்!

சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொழில்துறை ஆதாரங்களிலிருந்து உருவாகும் துகள் மாசுபாட்டைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால், திட்டமிட்ட இலக்குகளுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப காற்று மாசுபாட்டை திறம்பட கையாள்வதற்கான விரிவான மறுபரிசீலனை மற்றும் மாற்று உத்திகளை ஆய்வு செய்வதற்கான தேவை இருந்து வருகிறது.

புதிய திசையில் ஆராய்ச்சி: இந்த ஆராய்ச்சி பற்றி பேசிய பேராசிரியர் சச்சின் எஸ்.குந்தே , இந்தியாவின் மாசுபட்ட கடலோரப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொழில்களில் இருந்து பிஎம்2.5 துகள்களின் அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய உத்திகள் முழுமையாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துரைக்கின்றன என்றார்.

மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் நிறைந்த கந்தக டைஆக்சைடு (SO2) உமிழ்வைத் துகள்களாக மாற்றும்போது, வளிமண்டலத்தில் அதிக மேகங்களை உருவாக்கும் திறன் கொண்ட கந்தகம் நிறைந்த துகள் படலத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.வளிமண்டல தூசிப்படல துகள்களின் இரட்டைப் பங்களிப்பு மேகங்கள் உருவாவதற்கு இன்றியமையாததாக இருப்பதுடன் பூமியில் உயிர்கள் வாழ நன்னீர் கிடைப்பதை உறுதி செய்கின்றன.உள்ளே வரும் சூரிய கதிர்வீச்சை எதிர்கொள்வதால், பூமியின் கதிர்வீச்சு அளவிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிக்கலான தோற்றம், வெவ்வேறு விதமான தூசிப்படல பண்புகளின் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றின் பாதிப்புகள் தொழில் மயமாக்கலுக்கு முன் எவ்வாறு இருந்தன என்பதையும் அவற்றின் மாறிவரும் பண்புகள் மேக உருவாக்கத்தை எவ்வாறு பாதித்தன என்பதையும் வரையறுக்கப்பட்ட அறிவியல் புரிதலுடன் இணைத்து, இந்த நூற்றாண்டின் இறுதியில் சரியான வெப்பநிலை உயர்வைக் கணிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

நெய்வேலி மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் கந்தக டை ஆக்சைடு (SO2) வாயுவின் நீண்டதூரப் பயணத்தின் விளைவாகச் சென்னையில் புதிய துகள் உருவாக்கத்திற்கு (NPF) காரணமாக அமைகின்றன. அதாவது இடைநிலை துகள் படலத்தை (Secondary aerosols) உருவாக்கும் குறிப்பிட்ட நிகழ்வை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் SO2 புகைப்படலம் அதிகளவில் துகள் கந்தக செறிவுக்கும், அடுத்தடுத்த துகள் வளர்ச்சிக்கும் வழிவகுத்ததை ஆய்வு முடிவுகள் நிரூபித்தது. கந்தகம் நிறைந்த இந்த துகள்கள் மேக உருவாக்கத்திற்குத் தேவையான அளவிலும், நீரை உறிஞ்சும் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளன. இதனால் துகள்படலத்தில் இருந்து மேகத்தை உருவாக்கும் திறன் அதிகரிக்கிறது. வழக்கமான சூழல்களில் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

உள்ளூர் ஆதாரங்களில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் உமிழ்வுகள் நிறுத்தப்படும்போது, மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்சைடு (SO2) உமிழ்வுகள் புதிய துகள்களை உருவாக்குவதன் வாயிலாக PM2.5 துகள்களின் பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். இது போதுமான கணிப்புகளுக்கு நேர் எதிர்மறையாக உள்ளது. எனவே குறைவான மனித செயல்பாடுகளுடன் தூய்மையான சூழலில் குறிப்பிட்ட வாயுக்களால் புதிய துகள் படலம் உருவாவதுடன் பெருகுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் இருப்பதை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் மனித நடவடிக்கைகளின் காரணமாக ஆவியாகும் வாயுக்கள் ஏற்கனவே இருக்கும் துகள் படலத்தில் கலந்துவிடக் கூடும் என ஆய்வில் தெரிவித்துள்ளனர் .

இதையும் படிங்க : போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி அழுத காவலர்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.