ETV Bharat / state

"பால் கலப்படத்தை 30 நொடிகளில் கண்டறியும் 3டி கருவி" - சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு! - சென்னை ஐஐடியில் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், 30 விநாடிகளில் பால் கலப்படத்தைக் கண்டறியும் பேப்பர் பேஸ்டு 3டி கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியைப் பயன்படுத்தி, பால் மட்டுமல்லாமல், குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் உள்ளதா? எனப் பரிசோதனை செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IIT Madras
சென்னை
author img

By

Published : Mar 27, 2023, 6:53 PM IST

சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 விநாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பேப்பர் பேஸ்டு கையடக்க கருவியை வைத்து, பாலில் கலப்படம் உள்ளதா? என நமது வீடுகளிலேயே பரிசோதனை செய்து பார்க்க முடியும். யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட் உள்ளிட்ட பால் கலப்படத்துக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை இந்த கருவி மூலம் கண்டறியலாம்.

பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தில் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் உள்ளதா? எனப் பரிசோதனை செய்ய முடியும். இதில் எந்தவொரு திரவத்திலும் கலப்படத்தை சோதிக்க ஒரேயொரு மில்லி லிட்டர் மாதிரியே போதுமானது.

சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிஸ் பட்டரி, பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து ஆராய்ச்சி செய்து இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை மதிப்பாய்வு இதழான நேச்சரில் (https://doi.org/10.1038/s41598-022-17851-3) வெளியிடப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடியின் இயந்திரப் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறும்போது, "3டி காகித அடிப்படையிலான இந்த நுண்திரவக் கருவி (microfluidic device) மேல் மற்றும் கீழ் உறைகளையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும். அடர்த்தியான திரவத்தையும் சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியை 3டி வடிவமைப்பு சரியாகச் செய்கிறது.

காகிதம் ரீஏஜெண்ட்களுடன் வினைபுரிந்து உலர வைக்கிறது. இரு காகித அடுக்குகளும் உலர்ந்த பின் இரு பக்கங்களிலும் ஒட்டிக் கொள்வதுடன், உறைகளும் இரு பக்க டேப்புடன் ஒட்டிக் கொள்கின்றன. இந்த வடிவமைப்பில் நான்காம் கிரேடு வாட்மேன் பில்டர் பேப்பர் பயன்படுத்தப்படுவதால், திரவ ஓட்டத்திற்கு உதவுவதுடன், ரீ-ஏஜெண்ட்களை அதிகளவில் சேமித்துக் கொள்ள வைக்கிறது.

அனைத்து ரீஏஜெண்ட்களும் காய்ச்சி வடிகட்டிய நீர் அல்லது எத்தனாலுடன் அதனதன் கரையும் தன்மைக்கேற்ப கரைந்துவிடுகின்றன. நிறமானிக் கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்தி, கலப்படப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு திரவ மாதிரிகளால் கண்டறியப்படுகின்றன.

குறிப்பிட்ட கலப்படத்துடன் மட்டுமே வினைபுரியும் ரீஏஜெண்ட், எந்த பால் மூலப்பொருளுடனும் வினைபுரிவதில்லை என்பதை நம்மால் அனுமானிக்க முடியும். ஆகையால், பழரசம் உள்ளிட்ட திரவ உணவின் பாதுகாப்பையும் இந்தப் பகுப்பாய்வுக் கருவியால் கண்காணிக்கலாம். இதனால், குறிப்பாக வளரும் நாடுகளில் கலப்படப் பாலைக் கண்டறிவது அதிகரிக்கும்" என்றார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பால் மிக முக்கிய உணவுகளில் ஒன்றாகும். ஆனால், அதுதான் உலகிலேயே அதிக கலப்பட உணவுப் பொருளாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலப்படப் பாலை அருந்துவதால் சிறுநீரகப் பிரச்னைகள், சிசுக்கள் உயிரிழப்பு, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப் போக்கு போன்ற மருத்துவப் பிரச்னைகள் மட்டுமின்றி புற்றுநோய்ப் பாதிப்பும் ஏற்படலாம்.

இதையும் படிங்க: சாலை விபத்துக்களை தடுக்க நவீன ஆராய்ச்சி - சென்னை ஐஐடி புது திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.