ETV Bharat / state

இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாமில் புதிய உயரத்தை அடைந்த சென்னை ஐஐடி! - latest news in tamil

Chennai IIT: சென்னை ஐஐடியில் 2023 - 2024 ஆண்டு பிரிவு மாணவர்களுக்காக நடத்திய இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாமின் முதல் நாளிலேயே, இன்டர்ன்ஷிப் ஆஃபர்ஸ் 19 சதவீதம் உயர்ந்துள்ளதாக சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 1:48 PM IST

சென்னை: சென்னை ஐஐடியில் 2023 - 2024ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களுக்காக நடத்திய இன்டர்ன்ஷிப் (உள்ளகப் பயிற்சி) ஆட்தேர்வு முகாமின் (Internship Drive) முதல் நாளிலேயே, இன்டர்ன்ஷிப் ஆஃபர்ஸ் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் 2023 - 2024ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களுக்காக இன்டர்ன்ஷிப் (உள்ளகப் பயிற்சி) ஆட்தேர்வு முகாம் ஆகஸ்ட் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றன. இந்த முகாமின் முதல் நாளிலேயே, 7 நிறுவனங்களிடமிருந்து 19 சர்வதேச இன்டர்ன்ஷிப்பிற்கான வாய்ப்புகள் வரப் பெற்றுள்ளன. இதன் காரணமாக, இன்டர்ன்ஷிப் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இன்டர்ன்ஷிப்பிற்காக சென்னை ஐஐடிக்கு வருகை தந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, 51 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Texas Intruments), ஜே.பி.மோர்கன் சேஸ் அண்ட் கோ (JP Morgan Chase and co), அடோப் (Adobe), பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter and Gamble), டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் (Dr.Reddys Laboratories) போன்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை இன்டர்ன்ஷிப்பிற்காக தேர்வு செய்தன.

இது குறித்து சென்னை ஐஐடியின் இன்டர்ன்ஷிப் ஆலோசகர் சத்யன் சுப்பையா கூறும்போது, “மாணவர்களின் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இன்டர்ன்ஷிப் தற்போது இன்றியமையாததாக விளங்குகிறது. படித்த காலத்தில் பெற்ற திறன்களையும், திறமையையும் வாழ்க்கைப் பணிச் சூழலில் உணர்ந்து கொள்ள இப்பயிற்சி அவர்களுக்கு உதவுகிறது” எனக் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடியின் இன்டர்ன்ஷிப் இணை ஆலோசகர் முருகவேல் கூறும்போது, “கார்ப்பரேட் உலகில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், வகுப்பறையில் தாங்கள் கற்றுக் கொண்டதை உலகப் பிரச்னைகளில் நடைமுறைப்படுத்தவும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் உதவுகிறது.

முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையாக மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க முன்வந்திருப்பது, தொழில் துறையினர் எங்களது மாணவர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது” என்றார்.

இதையும் படிங்க: தலைநகரில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல் ஆணையர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.