சென்னை: சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையம் சார்பில் மாணவர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் புரொபெஷனல் பணியாளர்களுக்காக அட்வான்ஸ்ட் புரோகிராமிங் (Advanced Programming) ஆன்லைன் படிப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி-ஜியூவிஐ என்ற நிறுவனம் இணைந்து இந்த ஆன்லைன் படிப்பினை வழங்குகிறது.
இந்தியா முழுவதும் உள்ள விரும்பமுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள், தயாரிப்பு, டிசைனிங்கிலுள்ள ஐடி சேவைகளில் இளைஞர்களுக்கு தங்களுக்கான வேலையை தேடிக்கொள்ள இந்தப் படிப்பு உதவுகிறது.
ஐடி தொழில்துறையில் விருப்பமுள்ளவர்கள், குறிப்பாக அனுபவமிக்க புரோகிராமிங் திறன்கள் கொண்ட பொறியியல் இறுதியாண்டு மாணவர்களிடமிருந்து இந்த ஆன்லைன் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 மணி நேரம் கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு, மூன்று மாதத்தில் பணிப்புரிந்து கிடைக்கும் அனுபவத்தை மாணவர்கள் எளிதில் பெறும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் படிப்பினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு இறுதியில் சென்னை ஐஐடி சார்பில் சான்றிதழல் வழங்கப்படும். https://skillsacademy.iitm.ac.in. , https://www.guvi.in/IIT-Madras-Certified-Professional-in-Programming ஆகிய இணையதள முகவரிகளுக்கு சென்று விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடியின் டிஜிட்டல் திறன்கள் மையத்தின் நிறுவனர் பேராசிரியர் மங்கல சுந்தர் கூறுகையில், "இந்த படிப்பின் மூலம் மாணவர்கள் தாங்கள் பயின்ற துறையிலேயே வேலையை தேடிக்கொள்ள இயலும். மேலும், வங்கி தேர்வுகள் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குத் தயாராக இது உதவியாக இருக்கும்" என்றார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய ஜியூவிஐ தலைமை செயல் அலுவலரும், இணை இயக்குநருமான எஸ்.பி.பாலமுருகன், "ஐடிநிறுவனங்களில் பணிப்புரிய புரோகிராமிங் திறன்கள் இருக்க வேண்டியது அவசியம். பல்வேறு வழிகளில் அதற்கான பயிற்சிகளை ஜியூவிஐ நிறுவனம் உடனான இந்த ஆன்லைன் படிப்பு நமக்கு ஏற்படுத்தி தருகிறது" எனக் கூறினார்.
இதுதொடர்பாகன மேலும் சில தகவல்களை பெற பேராசரியர் மங்கல சுந்தரின் mangal@iitm.ac.in, mangalas@dth.ac.in, சிஇஓ பாலமுருகனின் spbalamurugan@guvi.in ஆகிய இணைய முகவரிகளை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவலுக்கு மத்தியில் சாதனை படைத்த மெட்ராஸ் ஐஐடி...!